TANFINET: Eligible persons can apply to implement the high-speed internet service project; Perambalur Collector information!

“பாரத் நெட்” (Bharat Net) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம் தமிழகத்தில் அதிவேக இணையதள சேவை (1GbPs) வழங்கப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 66 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் இணையதள சேவை வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்த தகுதி வாய்ந்த தனிநபர் / நிறுவனங்களிடமிருந்து (Franchisee Partners) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை https://tanfinet.in.gov.in/. இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தின் 2வது தளத்தில்  உள்ள TANFINET அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரை 98420 90551 என்ற எண்ணிலும், களப்பொறியாளரை 86751 94202 என்ற எண்ணிலும், இணையதள பொறியாளரை 82486 11149 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஆபீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!