Perambalur: “Ensure Saranya’s victory to make her Kunnam’s first female Member of the Legislative Assembly!” — Mani Mangai Sathyanarayanan campaigns in the Anandavadi and Thalavai areas in support of the IJK candidate.

செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி பகுதியில் குன்னம் சட்டமன்ற தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் சரண்யாவிற்கு ஆதரவாக மணி மங்கை சத்ய நாராயணன் தேர்தல் பரப்புரை செய்தார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றது. குன்னம் சட்டமன்ற தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளராக சரண்யா அன்பழகன் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனந்த வாடி பகுதியில் வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து, ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரின் இளைய மருமகள் மணிமங்கை சத்யநாராயணன் செய்த பரப்புரையின் போது பேசியதாவது:

முதலில் நான் நன்றி சொல்கிறேன். ஏனென்றால் நீங்கள் தான் வெற்றி பெற செய்யப் போகிறீர்கள் அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரை குன்னத்தின் முதல் வேட்பாளராக சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைக்க உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது டாக்டர் பாரிவேந்தர் தொகுதிக்கு என்ன தேவைகள் வேண்டும் என்பதை நிறைவேற்றினார். அதே போல் சரண்யா அன்பழகனை வெற்றி பெற செய்தால் ஆண்டிற்கு 100 பேருக்கு இலவச கல்வி வழங்கப்படும். மேலும், குன்னம் தொகுதியில் குடிநீர் சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும், என்னென்ன தேவைகள் என்பது அறிந்து அதனை நிறைவேற்றுவார்.

சட்டப்பேரவைக்கு சென்று குன்னம் தொகுதியின் குரலாக சரண்யா அன்பழகன் ஒலிப்பார், பாரிவேந்தர் குரலாக நான் சொல்கிறேன் சிந்தித்து வாக்களியுங்கள். எடப்பாடியார் ஆட்சி மலரும் என பேசினார்.

பின்னர், தளவாய் பகுதியில் அவர் பேசியதாவது: மருத்துவ வசதி, செய்து தரப்படும், மற்றும் தளவாய், அயன் தத்தனூர் உள்ளிட்ட ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும். முன்னேற்ற பாதையில் குன்னம் தொகுதி வளர அதற்காக சரண்யா அன்பழகனுக்கு வாக்களிக்க வேண்டும், சரண்யா அன்பழகன் வெற்றி பெறச் செய்தால் 100 பேருக்கு இலவச கல்வி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார் எடப்பாடியார், 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி ஆட்சி மலரும் என்றும் நீங்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் சத்யநாராயணனுக்கு முந்தரி மாலை அணிவிக்கப்பட்டது. தளவாய் கிராமத்தில் மணிமங்கை சத்ய நாராயணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியினர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!