Perambalur: Equality Dravidian Pongal celebrations and sports competitions organized by the DMK Women’s Wing!

பெரம்பலூர் மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில், பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திராவிட பொங்கல் விழா நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். பொங்கல் பரிசாக மகளிர் அணியினருக்கு சேலைகளை சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் வழங்கினார். முன்னதாக காலையில் இருந்து பெண்களுக்கான கபடி, கோகோ, ஊசி கோர்த்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது, டாக்டர் கருணாகரன், டாக்டர் ஜெயலட்சுமி கருணாகரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் டி.கே.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எம்.இராஜ்குமார், தி.மதியழகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், , ஆர்.அருண், நகர்மன்ற உறுப்பினர்கள் சித்தார்த், ஜெயப்பிரியா மணிவாசகம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம் மற்றும் ஜெயபால் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!