Perambalur: Executive committee meeting regarding the admission of new members! District DMK in-charge V. Jagatheesan’s statement!
பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், கே.என்.அருண்நேரு.எம்.பி.,- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோரது முன்னிலையில் , நாளை ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணிக்கு, பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.