Perambalur: Extension of members’ fingerprint or iris registration deadline for ration card!
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுவரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதார்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை அல்லது கருவிழி பதிவினை 31.05.2025-க்குள் வேலை நாட்களில் பொதுமக்கள் பொருட்கள் பெறும் நியாய விலைக் கடையில் உள்ள PoS இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். இதுவரை கைரேகை பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்படி, e-KYC பதிவு செய்வது தொடர்பாக எதிர்வரும் 23.05.2025 (வெள்ளிக்கிழமை) மற்றும் 24.05.2025 (சனிக்கிழமை) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறவுள்ளது. தங்களது குடும்ப உறுப்பினர்களில் இதுவரை கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்யாத நபர்கள் மேற்படி, முகாமில் பதிவு செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பிற மாநிலம், பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளவர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையினை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், சிறப்பு முகாம் நாட்கள் தவிர அனைத்து வேலை நாட்களிலும் நியாயவிலைக்கடைகளில் தங்களது கைரேகையினை பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.