Perambalur: Farmers allowed to take silt, clay for free; Collector informs!

பெரம்பலூர் மாவட்டத்தில நீர் வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகள் ஆகியவற்றில் தமிழ்நாடு சிறுகனிம சலுகைவிதி 12(2)-ன்படி மற்றும் அரசாணை எண்.50 தொழிற் (எம்எம்.சி.1) துறை, நாள்:27.04.2017-ன்படி விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வண்டல் மண், களிமண், மண் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட வட்டாட்சியரின் அனுமதி பெற்று இலவசமாக எடுத்துச் செல்லும் வகையில் ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகள் மாவட்ட அரசிதழ்களில் அறிவிக்கை செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டல் மண் /களிமண் / மண் ஆகிய கனிமங்கள் எடுக்க வாய்ப்புள்ள ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழ் எண்.5, நாள்: 26.06.2024, அரசிதழ் எண்.6, நாள்: 12.07.2024, அரசிதழ் எண்.6, நாள்: 11.04.2025, அரசிதழ் எண்.9, நாள்: 19.05.2025 வெளியிடப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 66 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 536 ஏரி குளங்கள் என மொத்தம் 602 நீர்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, விவசாய நிலத்தை மேம்படுத்த, மண்பாண்டம் செய்ய மற்றும் பொது பயன்பாட்டிற்கு தேவைப்படும் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் மற்றும் பொதுமக்கள் https://tnesavai.tn.gov.in/Citizen/PoratalLogin.aspx என்ற இணையதளத்தில் தங்கள் விவரத்தினை பதிவு செய்து விண்ணப்பம் செய்து வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று அரசிதழ் பட்டியலில் உள்ள ஏரி, குளங்களிலிருந்து இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

மேலும், இம்முறையில் விவசாயிகள், மண்பாண்டம் செய்வேர் மற்றும் பொதுமக்கள் முறையே விவசாய நிலத்தை மேம்படுத்த, மாண்பாண்டம் செய்ய, சொந்த பயன்பாட்டிற்கு தேவையான வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படும். வியாபார நோக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. அனுமதி பெறுவதற்கான இதர நிபந்தனைகள் மாவட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட அரசிதழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள நீர் நிலைகளில் விவரங்களை மேற்படி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது அறிவிக்கை நகலை உதவி இயக்குநர், புவிவியல் மற்றும் சுரங்கத்துறை மற்றும் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!