Perambalur: Farmers shouted earlier that the officials had insulted the Co-operative Week Festival!
பெரம்பலூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த 71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், எம்எல்ஏ., பிரபாகரன், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்க விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், விழாவிற்கு வந்திருந்த மதிக்காமல் அவர்களை அவமதித்ததாக குற்றம் சாட்டி அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் முன்பு கூச்சலிட்டு வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
கூட்டுறவு சங்கம் நாட்டு உயர்விற்கு இல்லாமல், கூட்டுறவில் பணி செய்பவர்களின் உயர்விற்காக என்பதாக மாறி வருகிறது. மேலும், பொதுமக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். கூட்டுறவு சங்க செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.