Perambalur: Former MLA R.T.R’s daughter Asmita topped the district level CBSE +2 with 479 marks!
சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இன்று 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷரம் பள்ளியில் பயின்று வந்த மாணவி 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அஸ்மிதா முதலிடத்தை பிடித்தார். இவர் முன்னாள் எம்.எல்,ஏவும், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரனின் மகள் ஆவார். கடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற அஸ்மிதாவை கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சக மாணவர்கள் பாராட்டி கவுரப்படுத்தினர்.