Perambalur: Free cell phone repair training for rural youth!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்களுக்கான இலவச செல்ஃபோன் பழுது நீக்கல் பயிற்சி வரும் 21.06.2025 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது. மேலும், இப்பயிற்சியில் 4G, 3G, GSM போன்களில் மதர்போர்டுகள், நெட்வொர்க் பிழை கண்டறிதல் மற்றும் சேவை செய்தல், GSM மற்றும் சிப் நிலை, சாலிடரிங், டி-சாலிடரிங் பிரிவுகள், கீ பேட் பிழை கண்டறிதல், டிரேசிங் ஸ்ட்ரிப் சிக்கல்கள், கூறுகள் மற்றும் சர்க்யூட் போர்டை சரிபார்த்தல், MMC சிக்கல்கள், சார்ஜிங் சிக்கல், கேமரா சிக்கல்கள், பேட்டரி, பிரச்சனை, காட்சி சிக்கல், தொங்கும் சிக்கல், நெட்வொர்க் சிக்கல் மற்றும் பல செல்போன் பழுது நீக்கல் சம்பந்தமான நுட்பங்கள் அனைத்தும் விரிவாகவும் நேர்த்தியுடனும் சிறந்த வல்லுநர்கள் மூலம் கற்றுதரப்பட உள்ளது
30 நாட்கள் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட,எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள், பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வி தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, 100 நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், பான் அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ்போட்டோ இணைத்து, ஜூன் 20ஆம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். என்றும் நேரிலோ அல்லது 04328277896 / 9488840328 எண்களில், அலுவலக நேரத்தில் (9.30AM to 5.30 PM) கொள்ளலாம் என அம்மையத்தின் இயக்குநர் முருகையன் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.