Perambalur: Free training in repairing household electrical appliances!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்களுக்கான வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது நீக்கல் பயிற்சி வரும் 3.07.2025ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. மின்சாரத்தின் அடிப்படைகள், பழுது நீக்குதல் மற்றும் வயரிங் செய்வதற்கு தேவையான உபகரணங்கள், வீட்டில் முறையாக வயரிங் செய்தல், சிங்கில் பேஸ் மோட்டார் ரீவைண்டிங் மற்றும் வீட்டிலுள்ள அத்தியாவசியமான மின் சாதனங்களான மின் விசிறி, மிக்சி, வெட் கிரைண்டர், ஹீட்டர், அயன் பாக்ஸ், வாஷிங் மெஷின், இண்டக்சன் ஸ்டவ், வோல்ட்ஜ் ஸ்டபிளைசர், ஏர் கூலர் உள்ளிட்ட வீட்டு உபயோக மின் சாதனங்களை சர்வீஸ் செய்வது மற்றும் அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்குவது விரிவாகவும் நேர்த்தியுடனும் சிறந்த வல்லுநர்கள் 90% தீவிர செயல் முறை பயிற்சியுடன் கற்றுத்தரப்பட உள்ளது.
35 நாட்கள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி நடக்கும், அப்போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட,எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பயிற்சி மையத்தில் தங்களது பெயர்,வயது, விலாசம்,கல்வி தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, 100 நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், பான் அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் ஃபோடோ இணைத்து, ஜூலை 2ஆம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்றப் பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். 04328277896 / 9488840328 எண்களில் அலுவலக நேரத்தில் (9.30AM to 5.30 PM) தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அம்மையத்தின் இயக்குநர் முருகையன் தெரிவித்துள்ளார்.