Perambalur: Gandhi’s birthday; Arun Nehru MP garlanded the statue and inaugurated the sale of khadicraft! Collector Mrinalini, MLA Prabhakaran were present

பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், காதிகிராப்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தனர்.
காந்தியின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பெரம்பலூர் எம்.பி. அருண்நேரு, கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் காதிகிராப்ட் அங்காடியில் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.1 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது. சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், காட்டன் மெத்தை விரிப்புகள் இவை அனைத்தும் பெரம்பலூர் கதர் அங்காடியில் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து கதர், பாலியஸ்டர், பட்டு இரகங்களுக்கு 30% மற்றும், உல்லன் இரகங்களுக்கு 20% அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசுத்துறை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் திரும்ப செலுத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், கதர் வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் குளியல் சோப்புகள், சலவை சோப்புகள், காலணிகள், ஜவ்வாது, ஊதுபத்தி, கப் சாம்பிராணி, சலவை திரவ சோப்புகள், கை கழுவும் திரவ சோப்புகள், சந்தன மாலைகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், கதர் அங்காடி மேலாளர் முருகன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497