Perambalur: Good Samaritans; Rs. 10,000 to the Eucharistic warriors who help people injured in road accidents; Collector’s information!

photo Credit to blog.ipleaders.in

சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கும் மனிதநேய மிக்கவர்களை (Good Samaritans) விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பது மற்றும் சிரமப்படுத்துவதிலிருந்து காப்பாற்றும் வகையில் மத்திய அரசின் சாலை பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Road Transport and Highways Notification No.25035/101/2014-RS நாள்.12.05.2015ல்) சில வழிவகைகளை தெரிவித்துள்ளது.

அதன்படி, விபத்து நடந்த இடத்தில் உள்ள மனித நேயமிக்கவர்கள் (Good Samaritans) விபத்தில் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவரிடம் சுயவிவரத்தைப் பெற்றுக்கொண்டு உடனடியாக அவரை செல்ல அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற மனித நேயமிக்கவர்களை (Good Samaritans) மாநில அரசு தகுந்த முறையில் மரியாதை செலுத்திட வேண்டும் என்றும், இதுபோன்ற நல்ல எண்ணம் கொண்டவர்களை (Good Samaritans) சிவில் மற்றும் குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது என்றும்,

விபத்தின் விபரம் பற்றி காவல் துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தருபவர்களின் பெயர் மற்றும் தனிப்பட்ட விபரங்களை தெரிவிக்குமாறு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வற்புறுத்தக்கூடாது என்றும், விபத்தை நேரில் பார்த்தவர் தாமாக முன்வந்து பெயர் மற்றும் தனிப்பட்ட விபரங்களை தர முன்வந்தால் மருத்துவமனை மூலம் வழங்கப்படும் Medico Legal Case Form மூலமாக மட்டுமே பெறப்படவேண்டும் எனவும், விபத்தை நேரில் பார்த்தவர்களின் பெயர் அல்லது மனிதநேயமிக்கவரின் (Good Samaritans) பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை அளிக்க வற்புறுத்தும் அரசு அலுவலர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர் தாமாக வாக்குமூலம் அளிக்க முன்வந்தால் அவரிடம் ஒருமுறை மட்டுமே சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவரை அச்சுறுத்தவோ இம்சிக்கவோ கூடாது.

சாலை விபத்தில் காயமுற்றவர் மீது உடனடி சிகிச்சை அளிக்க முன்வராத மருத்துவர் மீது தனது தொழிலை அவமதித்த குற்றத்திற்காக Chapter -7 மற்றும் Chapter-8 Indian Council Medical Regulation 2002-ன் படி நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனை வாயில்களிலும் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் மருத்துவமனை நிர்வாகம் விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனிருக்கவோ, விபத்துக்கு உள்ளானவர்களுக்காக பணம் செலுத்த தேவையில்லை என்ற விவரத்தை அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். விபத்தை நேரில் பார்த்தவர் அல்லது மனிதநேயமிக்கவர் (Good Samaritans) விரும்பினால் விபத்துக்குள்ளானவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது மற்றும் விபத்து நடந்த இடம் நேரம் போன்ற விவரங்களை தெரிவித்து ஒப்புதல் அளிக்கலாம் என வழிமுறைகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், மத்திய சாலை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways Notification No.25035/27/2021 – RS (195777) நாள்.03.10.2021ன்) படி விபத்தில் காயமுற்றவர்களின் உயிரைக்காப்பாற்றும் மனிதநேயமிக்கவர்களுக்கு ரொக்கமாக ரூ.5000/- வழங்கப்படும். மேலும், அரசாணை எண். G.O.(Ms).278 உள்(போ-ஏ) துறை நாள்.12.06.2023ன் படி, சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை (Good Samaritans) ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே, மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5000/- தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5,000/- என மொத்தம் ரூ.10,000 வழங்கப்படும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!