Perambalur: Guidance program for students who have passed +2 under the Naan Multhulvan project!
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் நடந்த நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லுரிக் கனவு எனும் உயர்க் கல்வி வழிக்காட்டல் நிகழச்சி நடந்தது. 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு 2025ஆம் ஆண்டிற்கான வழிகாட்டு கையேட்டினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். தொடர்ந்து உயர் கல்வியில் என்னென்ன படிப்புகள் உள்ளது, எந்த படிப்பிற்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது, உயர்கல்விக்கு கல்விக் கடன் எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்து, அரசு துறைகள், பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் மூலமாக அமைக்கப்பட்டிருந்தது.
12ம் வகுப்பு படிக்கும் போது 50 சதவீதத்துக்கும் குறைவான வருகைப் பதிவு மற்றும் தேர்ச்சி மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகள் மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து அரசுத்துறைகளின் முதல் நிலை அலுவலர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.