Perambalur: Husband dies after being hit by bike while trying to cross the road in front of his wife; AIADMK members block road as ambulance arrives late!

பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி பழைய ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கண்ணன் (65). இவர் இன்று நண்பகல் 12 மணி அளவில் எல்.ஐ.சி ஆபிசிற்கு செல்ல சாலையை தனது மனைவி ராஜாங்கத்துடன் கடக்க முயன்றார். அப்போது, அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த செபதிஸ்தியர் மகன் பிரிட்டோ (21), என்பவரின் பைக் மோதியதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் மிதந்து பலியானர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்கள் சாலையெங்கும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாலை விபத்து நடந்த சமயத்தில் அதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர். தமிழ்ச்செல்வன் அவ்வழியாக காரில் கட்சியினருடன் வந்தார். விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரவில்லை என்று அறிந்த அவர், இதனால், காரில் இருந்து இறங்கியவர் சற்று நேரம் தனது கட்சியினருடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோசமிட்டார். அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார்.

உயிரிழந்த கண்ணனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பாக இருந்தது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!