Perambalur: Interview with DMK Engineer Team executives! District in-charge V. Jagatheesan’s statement!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆணையின்படி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. எம்.பி., ஆணைக்கினங்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனையின் பேரில், மாநில பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி.கருணா வழிகாட்டுதல்படியும், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளரும்- மண்டல பொறுப்பாளருமான இரா.ப.பரமேஷ்குமார் தலைமையிலும், பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் முன்னிலையிலும், ஒன்றிய, நகர, பேரூர் திமுக பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு 17.04.2025 (வியாழக்கிழமை), காலை 10.00. மணியளவில், பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாநில பொறியாளர் அணி செயலி மூலம் பதிவு செய்தவர்கள் மேற்கண்ட நேர்காணலில் பங்கேற்கும் படியும், நிர்வாகிகளும் பங்கேற்கும்படியும் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு, தெரிவித்துள்ளார்.