Perambalur: Kalpana Chawla Award for brave and heroic women!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால், துணிச்சலான மற்றும் வீர தீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கத்துடன் ரூ.5,00,000/- ( ஐந்து இலட்சம்) ரொக்க பரிசும் வழங்கப்படும்.
இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட பெண்ணாகவும், துணிச்சலான மற்றும் வீரதீர சாகச செயல் புரிந்திருக்க வேண்டும். எனவே, இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 16/06/2025 அன்று மாலைக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. பதிவு செய்த விவரத்தினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர், தொலைபேசி எண் : 04328-296209. என்ற முகவரியில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பித்திட வேண்டும் என கலெக்டரேட் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பபட்டுள்ளது,