Perambalur: Karunanidhi Memorial Day: Peace rally, DMK members shower flowers on the Photo
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில், எம்.எல்.ஏ பிரபாகரன் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று அங்குள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர்,பெரம்பலூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கும், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, அழகு.நீலமேகம், மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன்,
வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை தலைவர் எம்.ரெங்கராஜ், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை,
ஒன்றிய பொறுப்பாளர் செ.வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன்,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், மா.பிரபாகரன், முன்னாள் மாவட்ட கவுண்சிலர் எஸ்.செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, ஆர்.கணேசன்
உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளனர்.