Perambalur: KYC, Aadhaar seeding with bank account, and personal identification number for farmers must be linked in PM Kissan scheme: Collector information!

மத்திய அரசின் மூலமாக பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000/- அவர்களது வங்கிகணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 20-வது தவணை வரும் ஜீன் – ஜீலை மாதத்தில் வழங்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் இணைந்து உள்ள அனைத்து தகுதியான விவசாயிகளும் பி.எம்.கிசான் திட்டப்பலன் தொடர்ந்து கிடைக்க பெற விவசாயிகள் இ.கே.ஒய்.சி. மற்றும் தங்கள் வங்கிகணக்கு எண்ணுடன் ஆதார் சீடிங் மற்றும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்று இணைக்க வேண்டும். இம் மூன்று பணிகளை முடித்த பயனாளிகளுக்கே அடுத்து வரும் பி.எம் கிசான் திட்டத் தவணைகள் கிடைக்கப் பெறும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இது நாள் வரை 4,469 பயனாளிகள் இ.கே.ஒய்.சி. செய்யாமல் உள்ளனர். இவர்கள் ஆதார் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுடன் அருகில் உள்ள இ.சேவை மையங்களை அணுகி இ.கே.ஒய்.சி. செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் சீடிங் செய்யாமல் 2,990 பயனாளிகள் உள்ளனர். இவர்கள் இந்தியா போஸ்ட்பேமண்ட் வங்கியில் புதியதாக வங்கி கணக்கு துவங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விவசாயிகள் தற்சமயம் நடைபெற்று வரும் பி.எம்.கிசான் சிறப்பு முகாமில் இத்திட்டம் தொடர்பான தங்களது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம், மே மாதம் 31 ஆம் தேதிவரை இம்முகாம்கள் நடைபெற உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!