Perambalur: Legal awareness camp on the occasion of Constitution Day! Perambalur District Legal Services Commission and Victims Legal Voice jointly organized it!!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், விக்டிம்ஸ் லீகல் வாய்ஸ் இணைந்து இந்திய அரசியலமைப்பு சட்டநாள் விழா, சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஏ. சரண்யா சிறப்புரையாற்றினார். அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து பேசிய நீதிபதி சரண்யா அரசியலைமப்பு தினமான இன்று நாம் ஒரு புத்தகத்தை மட்டும் அல்ல! இந்திய குடியரசை வடிவமைத்த நமது சுதந்திரத்தை காக்கும் நீதி, சமத்துவம், மரியாதை ஆகியவற்றை நோக்கி பயணத்தை வழிநடத்தி கொண்டிருக்கும் சிந்தனையை கவுரவிக்கிறோம், அரசியலமைப்பு மக்களின் மூலமே உயிர்ப்புடன் இருக்கும், குடிமக்கள் தங்களின் உரிமைகளை அறிந்து, மற்றவர்கள் உரிமைகளை அறிந்தும் செயல்பட வேண்டும். அரசியலைமப்பு உரிமைகளை அச்சமின்றி பாதுகாக்க வேண்டும், அனைத்து குடிமக்களின் சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை மதித்து அவரவர் கடமைகளை நேர்மை, பொறுப்பு சட்டத்தை மதிக்கும் பண்புடன் நிறைவேற்ற வேண்டும். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய விக்டிம்ஸ் லீகல் வாய்ஸ் நிறுவனர் பிரபாகரன் இந்திய அரசியலமைப்பு சட்டநாள் விழா குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர்கள் வாசுதேவன், காமராஜ், தமிழரசன். அரசு வழக்கறிஞர் சுரேஷ் குமார் மற்றும் சத்தியசீலன், பார் அசோசியசன் சங்க செயலாளர் சேகர் மற்றும் அட்வகேட் அசோசியசன் சங்கத் தலைவர் சிவசங்கரன் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்டநாள் விழா குறித்து விரிவாக பேசினர். முன்னதாக வழக்கறிஞர் சங்கர் வரவேற்றார். வழக்கறிஞர் சக்திபாலன் நன்றி கூறினார். ஏசுதாஸ் பால், இளங்கோவன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும், பொது மக்களும் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!