Perambalur; “Ungalai Thedi Ungal ooril ” project is underway in Kunnam circle: Collector information!
மே-2025 மாதம் 3வது புதன்கிழமை (21.05.2025) அன்று “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளனர். மேலும், அன்றைய தினம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட வரகூர் குறுவட்ட பகுதிக்கு குன்னம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்கு கீழப்புலியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு பென்னக்கோணம் (வடக்கு) கிராம நிர்வாக அலுவலகத்திலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமும் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்தும் மற்றும் பட்டா மாறுதல் சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.