நேபாளம் நாட்டிலுள்ள ஹார்த்திவாடா அருகே உள்ள ரோஹயநாராபகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் பெரம்பலூர் பகுதியில் மீட்கப்பட்டு அவர் குணம் அடைந்ததால் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நேபாளத்தை சேர்ந்தவர் தீபக்(25) இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார்.
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பல்வேறு இடங்களில் வேலை தேடி அழைந்த தீபக் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெரம்பலூரில் சுற்றி திரிந்தார்.
இதனையறிந்த பெரம்பலூர் வேலா கருணை இல்லம் என்ற தொண்டு நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மீட்டு உணவு, உடை, இருப்பிடம் வழங்கி பராமரித்து வந்தது.
இந்நிலையில் குணமடைந்த தீபக் அவரது சொந்த ஊர் உள்ளிட்ட இருப்பிடம் குறித்த தகவல்களை தெரிவித்தார்.
குடும்ப வறுமையை போக்க வேலை தேடி ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தொண்டு நிறுவனத்தின் மூலம் தகவல் தெரிவித்து, தீபக்கின் மனைவி சீதா (23), உள்ளிட்ட குடும்பத்தினர் இன்று பெரம்பலூர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் தீபக் ஒப்டைக்கப்பட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் மீட்கப்பட்டு குணம் அடையச் செய்து அவரை குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மனத நேயம் தீபக்கின் குடும்பத்தாரை பெரும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497