Perambalur: Minister Sivashankar inaugurated 6 new BS VI model town buses on 4 routes!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 வழித்தடங்களுக்கு 6 புதிய BS VI ரக மகளிர் விடியல் பயண நகரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வாலிகண்டபுரம், தொழுதூர் வழியாக லப்பைக்குடிக்காடு வரையில் 2 பேருந்துகளும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சித்தளி, பேரளி வழியாக குரும்பாபாளையம் வரை ஒரு பேருந்தும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செங்குணம் வழியாக பொன்னகரம் வரை 2 பேருந்துகளும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிறுவாச்சூர், இலுப்பைக்குடி வழியாக சில்லக்குடி வரை ஒரு பேருந்தும் என மொத்தம் 6 புதிய BS VI ரக நகரப் பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதுவரை 4.19 கோடி மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் சி.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், ஆலத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர், போக்குவரத்து கழக பணியாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்










kaalaimalar2@gmail.com |
9003770497