Perambalur: Minister Sivashankar inaugurated the distribution of uniforms, textbooks, and book bags to 53,877 students!
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025- 26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள், பாடநூல்கள் மற்றும் புத்தகப் பையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வழங்கினார்.
இதேபோல பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் புதிய பாடநூல்கள், பள்ளி சீருடைகள் மற்றும் புத்தக பைகளை மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.