Perambalur: Minister Sivashankar laid the foundation stone for projects worth Rs. 17.19 crore in Alathur union!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கலம், தொண்டப்பாடி, நொச்சிக்குளம், அருணகிரிமங்கலம், திம்மூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்டபட்ட மங்கலம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.84.50 லட்சம் மதிப்பீட்டில் கீழமாத்தூர் – மங்கலம் செல்லும் சாலை யினை பலப்படுத்தும் பணி, தொண்டபாடி பகுதியில் ரூ.23.70 மதிப்பீட்டில் தொண்டபாடி முதல் சடைக்கன்பட்டி செல்லும் சாலை பலப்படுத்தும் பணி, நொச்சிக்குளம் ஊராட்சியில் ரூ.1.82கோடி மதிப்பீட்டில் ஏ.கே.கே.சாலை முதல் புஜங்கராயநல்லூர் சாலை பலப்படுத்தும் பணி, அருணகிரிமங்கலம் ஊராட்சியில் ரூ.50.15 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையினை பலப்படுத்தும் பணி, திம்மூர் ஊராட்சியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் திம்மூர் – மேத்தால் சாலையினை பலப்படுத்தும் பணி, கொட்டரை ஊராட்சியில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் கொட்டரை – ஆதனூர் செல்லும் சாலையினை பலப்படுத்தும் பணி, கொளக்காநத்தம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் அரசு கலை கல்லூரி கட்டும் பணி, கூடலூர் ஊராட்சியில் ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் கூடலூர் – கூத்தூர் இடையே செல்லும் சாலையில் மருதையாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, சாத்தனூர் ஊராட்சியில் ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் – சாத்தனூர் செல்லும் சாலையில் மருதையாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஆலத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, கொளக்காநத்தம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராகவன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், அயனாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பாலமுருகன், ஒப்பந்ததாரர்கள் ஜனார்த்தனன், வெங்கடேசன், சிவா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் திமுக கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!