Perambalur: Minister Sivashankar laid the foundation stone for the new projects at Rs 11.98 crore!

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்..சிவசங்கர், பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.98 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேப்பூர் பேருந்து நிழற்குடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பெருமத்தூரில், அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.8.40 லட்சம் மதிப்பீட்டில் முனியன் வீடு முதல் பிள்ளையார் குளம் வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும், ரூ.3.79 லட்சம் மதிப்பீட்டில் பெருமத்தூர் ஊராட்சி அம்பேத்கார் சிலை முதல் ஜோதி வீடு வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும்,

மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் பரவாய் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பரவாய் ஆலமரம் அருகில் பேருந்து நிழற்குடை கட்டும் பணியினையும், ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பரவாய் வள்ளுவ தெருவில் போர்வெல் மற்றும் மினி டேங்க் அமைக்கும் பணியினையும்,

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் பெருமத்தூர் ஊராட்சியில் ரூ.144.57 லட்சம் மதிப்பீட்டில் மழவராயநல்லூர் முதல் காருகுடி, பெருமத்தூர் வரை தார் சாலை அமைக்கும் பணியையும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.132.21 லட்சம் மதிப்பீட்டில் பெருமத்தூர் முதல் பெருமத்தூர் குடிக்காடு வரை தார் சாலை அமைக்கும் பணியினையும்,

முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பீல்வாடி ஊராட்சியில் ரூ.164.80 லட்சம் மதிப்பீட்டில் பேரளி முதல் பீல்வாடி வரை தார் சாலை அமைக்கும் பணியினையும்,

தலா ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் ஓலைப்பாடி மற்றும் திருமாந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினையும்,

வைத்தியநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிக்குரும்பலூர் ஊராட்சியில் ரூ.3.19 லட்சம் மதிப்பீட்டில் வைத்தியநாதபுரம் ஆதிதிராவிடர் தெரு மினி டேங்க் முதல் உடைசாயி வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.4.19 லட்சம் மதிப்பீட்டில் வைத்தியநாதபுரம் ஆதிதிராவிடர் தெரு மினி டேங்க் முதல் பாலுசாமி வீடு வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும்,

நன்னை ஊராட்சியில் ரூ.7.54 லட்சம் மதிப்பீட்டில் வேப்பூர் சாலை முதல் மாரியம்மன் கோவில் வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.305 லட்சம் மதிப்பீட்டில் நன்னை முதல் லெப்பைக்குடிக்காடு வரை ஒரு வழி பாதையை இருவழி சாலையாக தரம் உயர்த்துதல் பணியினையும்,

அசூர் ஊராட்சியில் ரூ.335.10 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் இருந்து அசூர் வழியாக ஆய்க்குடி வரை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியினையும், ரூ.5.22 லட்சம் மதிப்பீட்டில் அசூர் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் வெள்ளையப்பன் டீ கடை முதல் ரேஷன் கடை வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும், ரூ.9.25 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனியில் வெள்ளையப்பன் டீக்கடை முதல் ரேஷன் கடை வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.11.98 கோடி மதிப்பீட்டில் 16 புதிய பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமி, திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், உள்ளிடட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!