Perambalur: Ministers Subramanian and Sivasankar inaugurated hospitals built at a cost of Rs 1.85 crore.
பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் மற்றும் அரும்பாவூரில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களையும், கல்பாடி மற்றும் குரும்பலூர் பகுதிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடங்களையும், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடத்தையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., வரகூர் துரைசாமி, கை.களத்தூர் ஊராட்சித் தலைவர் சுமதி, ஒன்றிய சேர்மன்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை, திமுக பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மகாதேவிஜெயபால் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.