Perambalur: Mother who left her child with jewelry on the bus while going to buy drinking water; Bus staff handed her over to the police!
பெரம்பலூர் அருகே உள்ள அனுக்கூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத் (25), சிவப்பிரியா(21) தம்பதியரினர். இவர்களுக்கு தன்விகா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. கை.களத்தூர் கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சிவப்பிரியா தனது மகள் தன்விகாவுடன் இன்று மதியம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்து வெள்ளுவாடி சென்ற அரசுப் பேருந்தில் ஏறி சுமார் 5 பவுன் தங்க நகை மற்றும் உடைகள் இருந்த கைப்பையுடன் மகளை பேருந்தின் இருக்கையில் அமரச் செய்து விட்டு கீழே இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்ற நிலையில், பேருந்து நகர்ந்ததாக கூறப்படுகிறது.
அங்கு பேருந்து காணததை கண்ட சிவப்பிரியா பேருந்து புறப்பட்டு விட்டதாக எண்ணி உறவினர் ஒருவரை உதவிக்கு அழைத்து கொண்டு பைக்கில் பேருந்தை பிடிக்க வேப்பந்தட்டை வரை துரத்தி சென்றுள்ளார்.
ஆனால், பேருந்தினுள், சிறுமி ஒருவர் தனந்தனியாகவும், யார் துணையும் இல்லாமல் தனியாக பேருந்தின் இருக்கையில் அமர்ந்திருந்ததை கண்ட நடத்துனர் செல்லதுரையும், ஓட்டுநர் திருமாறனும் நேரம் காப்பாளர் அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பேருந்திற்கு சென்ற பிரபாகரன் என்ற தற்காலிக போக்குவரத்து ஊழியர் அந்த சிறுமியையும் அவர் அருகில் இருந்த உடமைகளையும் மீட்டு வந்து புறக்காவல் நிலைய போலீஸிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.
பின்னர், அங்கு வந்த தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் சிறுமியை பாதுகாப்பாக திண்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலூட்டி, விளையாட்டு காண்பித்து, உடமைகளை சோதனையிட்டு சிவப்பிரியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புறக்காவல் நிலையம் வரவழைத்து அந்த சிறுமியையும், தங்க நகை உள்ளிட்ட உடமைகளும் பத்திரமாக ஒப்படைத்தனர். சிறு குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் துணைக்கு உறவினர்கள் யாரைவாது அழைத்து செல்வது நல்லது,