பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று இரவு, கோனேரிப்பாளையம் புறவழிச்சாலை பிரிவு சாலையில் வேளாண்மை அலுவலர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பெரம்பலூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த எசனை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், சுந்தர்ராஜன் ஆகிய இருவரையும் சோதனை சேய்த போது அவரிடம் உரிய ஆவணமின்றி ரூபாய்.1 லட்சத்து 33 ஆயிரத்து 480 வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே பறக்கும் படையினர் பணத்தைக் கைப்பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெரம்பலூர் சார் நிலைக் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.