Perambalur: On behalf of Nehru Yuvakendra and Hope Trust, World Women’s Day: Competitions were held and prizes were awarded!
பெரம்பலூர் மை பாரத் – நேரு யுவ கேந்திரா மற்றும் ஹோப் டிரஸ்ட் சார்பில் சர்வதேச மகளிர் தினம் ஹோப் ட்ரஸ்ட் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ஏராளமாக கலந்து கொண்ட பெண்களுக்கு, அவர்களுடைய திறமையை வெளிக்காட்டும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மை பாரத் – நேரு யுவ கேந்திரா கீர்த்தனா, ஹோப் டிரஸ்ட் திட்ட இயக்குனர் திவ்யா செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த, மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா, பெண்கள் உடல் நலனை பேணிக் காப்பது பற்றியும், பொருளாதார சார்பின்மையின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.