Perambalur: On behalf of the Hindu Religious and Charitable Endowments Department, Minister Sivashankar honored an elderly couple by presenting them with auspicious items.

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த 27 மூத்த தம்பதியினருக்கு தலா ரூ.2,500 மதிப்பிலான வேட்டி, சேலை, சட்டை, மாலை மற்றும் மங்கலப் பொருட்களை கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் வழங்கி சிறப்பு செய்தார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஆ.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 2025 – 26 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்.” என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயது பூர்த்தியடைந்த 27 இணைகளுக்கு தலா ரூ.2,500 மதிப்பிலான வேஷ்டி, சட்டை, சேலை, மாலை மற்றும் மங்களப் பொருட்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கி சிறப்பு செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் ஞானசேகரன், திருச்சி உதவி ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் உமா, சிறுவாச்சூர் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன் மற்றும் கோயில் ஊழியர்கள் செல்வம், வெங்கடேசன், கோவிந்தராஜ், சிறுவாச்சூர் திமுக கிளை செயலாளர் அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497