Perambalur: One year imprisonment for causing an accident that killed 2 people, Rs. 2 thousand fine; Court verdict!
பெரம்பலூரில், நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 1 வருடம் சிறை தண்டனையும் ரூ. 2 ஆயிரத்தை அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பெரம்பலூர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள ராயர்பாளைத்தை சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணுசாமி (48) என்பவர் விபத்து ஏற்படுத்தியதில் 2 நபர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து கண்ணுசாமி மீது, அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்டுத்திய பிரிவுகளின் கீழ்பெரம்பலூர் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளியான கண்ணுசாமிக்கு ஓர் ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையுடன், ரூ. 2 ஆயிரம் அபராத்தை விதித்தும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 4 வார காலம் மெய்க்காவல் சிறை என்றும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், கண்ணுசாமியை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.