Perambalur: Police chained vehicles parked illegally at the new bus stand!

பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் வந்து செல்லும் பயணிகள், வாகனங்களை நிறுத்தி செல்லும் நகராட்சியின் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பதால் அதிகளவில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை பஸ் ஸ்டாண்டிலேயே அதிகமாக நிறுத்தி செல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், பஸ் மற்றும் பயணிகள் சிரமம் அடைந்து வந்தனர். மேலும், வாகனங்களில் திருட்டும் நடந்து வந்த நிலையில் பல முறை போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரும் பல முறை எச்சரித்தும், அபராதங்களை விதித்தும் அதனை பொருட்படுத்தாமல், வாகனங்களை நிறுத்தி சென்றனர். இன்று காலை பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், டிராபிக் இன்ஸ்பெக்டர் மகேஷ், எஸ்.ஐ பன்னீர்செல்வம், பிரசன்னா ஆகியோர் தலைமையில் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு இடையூறாக இருந்து பைக் மற்றும் ஸ்கூட்டர்களை எடுத்து சென்று ஓரிடத்தில் வைத்து சங்கிலியால் பிணைத்து கட்டி வைத்தனர். பின்னர், வாகன உரிமையாளர்கள் காணவில்லை போலீசை தேடி வந்த போது, அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வாகனங்களை திருப்பி கொடுத்தனர். பொதுமக்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களை மதிக்காமல் தொடர்ந்து பஸ் ஸ்டாண்டிற்குள் அத்துமீறி வருவதால் போக்குவரத்து போலீசார், பஸ் டிரைவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதையும் தாண்டி பொதுமக்கள் பைக், ஸ்கூட்டர்களை நிறுத்திக் கொள்ள கயிறும் அடித்து கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவது போக்குவரத்து போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டிக்குள் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்துவதற்கும், போராட்டங்கள் நடத்துவதற்கும் போலீசார் அனுமதி வழங்க கூடாது என்றும், அதனால் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வெளியூர் பயணிகள் வந்து செல்ல பெரும் சிரமப்படுகின்றனர். புது பஸ் ஸ்டாண்டு கிழக்கு புறம் விசாலமாக இருந்த மைதானத்தை நகராட்சி ஆபீஸ் உள்ளிட்ட இடங்கள் வந்ததால், கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலி மைதானம் லட்ச கணக்கில் வாடகையை வசூல் செய்து லாபம் ஈட்டி வருகிறது. நகராட்சிக்கு ஆண்டு 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!