Perambalur: Police consultation with those PMK Party People

வரும் மே-11 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் பெரம்பலூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்ளும். வன்னியர் சங்கம், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர்களுடன் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மாநாட்டிற்கு வாகனத்தில் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூர் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் மற்றும் மங்களமேடு டி.எஸ்.பி தனசேகரன் உள்பட அனைத்து போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள் கலந்துக கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497