பெரம்பலூர் நகராட்சியின் 9வது வார்டான துறைமங்கலம் பகுதி மக்கள் சுத்தமான குடிநீர் வழங்க கோரி பொது மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை மாசு கலந்த நீர் கலந்து வருவதாகவும், அந்த நீரைப் பயன்படுததுவதால் உடலில் அரிப்பு உள்ளிட்ட தொல்லைகளை ஏற்படுத்துவதாகவும்,
இதுகுறித்து குடிநீர் விநியோகிப்பாளர், வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை சுத்தமான குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்தரமடைந்த அப்பகுதி பொது மக்கள் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் நகராட்சி தலைவர் ரமேஷ், அலுவலர்கள், மற்றும் பெரம்பலூர் காவல் நிலையத்தினர் ஆகியோர் ,
சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்தின் பேரில் போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.