Perambalur: Rs. 1.58 lakhs looted from farmer who kept money in moped compartment!
பெரம்பலூர் மாவட்டம், திம்மூரை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் நேற்று முன்தினம் கொளக்காநத்தத்தில் உள்ள கனரா வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ரூ. 1 லட்சத்து 58 ஆயிரம் பெற்றுள்ளார். அதனை வங்கி வெளியில் இருந்து மொபட்டு பெட்டியில் வைத்து பூட்டி விட்டு மீண்டும் வங்கிக்குள் சென்று உறவினர்களை பார்த்து விட்டு திரும்ப வந்து பார்த்த போது, மொபட் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் காணமல் போனதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது குறித்த, புகாரின் பேரில் வழக்குப் பதிவு மருவத்தூர் போலீசார், வங்கி மற்றும் கடைவீதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.