Perambalur: Seek legal aid if you have complaints about laws: Justice Kavitha Speech!
பெரம்பலூர்: குன்னம் வட்ட சட்டபணிகள் குழுவின் சார்பில் குன்னம் ஊராட்சி அலுவலகத்தில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான எஸ்.கவிதா தலைமை வகித்த அவர் பேசியதாவது:
தங்களுக்கு ஏதேனும் சட்டங்கள் குறித்து குறைகள் இருப்பின் சட்ட உதவி மையத்தை நாடலாம், இரு தரப்பினரும் பேசி சமரசம் செய்து கொள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம், ஏழை, எளிய மக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இலவச சட்ட உதவி மையத்தை நாடலாம் என பேசினார்.
குன்னம் ஊராட்சித் தலைவர் தனலட்சுமி வரவேற்றார். வழக்கறிஞர்கள் இனியவன், அசோக்குமார், சத்தியமூர்த்தி, பகுத்தறிவாளன், இலக்கியா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, வி.ஏ.ஓ. அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட தன்னார்வாளர்கள் ஏற்பாடு செய்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் வெள்ளைசாமி நன்றி கூறினார்.