Perambalur: Sithali; Worship of the clan deity once every 10 years; Around 1400 Kitas are cut and feasted!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தில், அமைந்துள்ள ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ நல்லதாய் அம்மன், ஸ்ரீ புலி முகத்து கருப்பையா, ஸ்ரீ பேச்சியாகி பெரியாண்டவர் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குலதெய்வ வழிபாட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்! அதேபோல் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை தஞ்சாவூர் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த வழிபாட்டுக்காரர்கள் முன்னிலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
5 நாட்கள் நடைபெறும் இந்த குலதெய்வ வழிபாட்டு திருவிழாவை ஒட்டி அனைத்து தெய்வங்களுக்கும் நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி பூஜை செய்து நேர்த்தி கடனை செலுத்தி சமைத்து உற்றார், உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பரிமாறி உண்டு ( உடையார் 3சமூகத்தினர் ) மகிழ்ந்தனர்.
மும்மாரி மழை வேண்டியும், விவசாயம் செழித்து தளைத் தோங்கவும், வறுமைப் பிணி தீர்ந்து வாழ்வு செழிக்கவும், பொருளாதார மேம்பாடு அடையவும், நோய் நொடியின்றி வாழவும், இன ஒற்றுமைத் தளைத்தோங்கவும் நடைபெறும் இந்த குலதெய்வ வழிபாட்டு திருவிழாவில் புதுக்கோட்டை திருச்சி தஞ்சை அரியலூர் பெரம்பலூர், கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் குடும்பத்தாரோடு கலந்து கொண்டு பயபக்தியுடன் தெய்வங்களை வழிபாடு செய்தனர். இந்தக் குலதெய்வ திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வழிபாட்டுக்காரர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் செய்து இருந்தனர்.
சுமார் ஓராண்டுக்கு முன்னதாகவே, சித்தளி மற்றும் சுற்று வட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் முன்தாக வாடகை கொடுத்து வீடுகளை புக்கிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.