Perambalur: Social workers and charitable organizations that have served women can apply for the award; Collector informs!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்தசமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2025ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/-ரொக்கப் பரிசு (ம) சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/-ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கபடவுள்ளது.
இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும்,18 வயது மேற்பட்டவரகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாட்டு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மென்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) ) 12.06.2025 மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்து, பதிவு செய்த விவரத்தினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் செய்த விவரத்தினை தகுந்த ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.