Perambalur: Sports competitions for fire service personnel from the Trichy region!

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையின் மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி சார்பாக 2026-ஆம் ஆண்டிற்கான துறை சார்ந்த, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நேற்றும் இன்றும் நடந்து வருகிறது. இதில், திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

அணிவகுப்பு பயிற்சி, ஏணி பயிற்சி, கயிறு ஏறுதல், நீர்விடுகுழாய், தந்திர கதம்ப முறை பயிற்சி, நீச்சல் போன்ற போட்டிகளும் உடற்திறனை வலுப்படுத்தும் விதமான போட்டிகளான தடகளம், பல்வேறு வகையான ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல், தடை தாண்டுதல், கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கலை நிகழ்ச்சி ஆகிய போட்டிகளும் நடந்து வருகிறது.

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ பசேரா, மத்திய மண்டல துணை இயக்குநர் க.முரளி போட்டிகளை துவங்கி வைத்தார். மாவட்ட அலுவலர்கள், அனுசுயா, குமார், ஹக்கீம் பாட்ஷா, சந்திரகுமார், சத்தியகீர்த்தி வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெறும் அணிகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!