Perambalur: Spotted deer escaped from the house after being chased away by dogs!
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இன்று காலை சுமார் 7.30 மணி அளவில் காட்டிலிருந்து வழிதவறி ஊருக்குள் மான் 3 வயது கொண்ட ஆண் புள்ளி மான் ஒன்று புகுந்தது. இதனை கண்ட நாய்கள் விரட்டி பிடித்து கடித்து குதிற தொடங்கியது. இதனால் பயந்த மான், உயிர்பயத்தில் தப்பிக்க மான் ஓடிய போது மானின் கொம்பு உடைந்து ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் மானை நாய்களிடம் மீட்டு முதலுதவி செய்தனர். பின்னர், பெரம்பலூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு செட்டிகுளம் கால்நடை மருத்தகத்தில் சிகிச்சை அளித்து மான் வனப் பகுதியில் விட்டனர்.