Perambalur: Sri Sukanda Kusalambhikai Udanurai Sri Kailasanathar temple is being established
பெரம்பலூர் நகரில் உள்ள செக்கடி தெரு ஸ்ரீ சுகந்த குசலாம்பிகை உடனுறை ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் திருப்பணிக்காக இன்று காலை பாலஸ்தாபனம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக யாகசாலை அமைத்து யாக குண்டங்களுக்கு பலவிதமான மூலிகைப் பொருட்களைக் கொண்டு யாகம் வளர்த்து கடங்களில் ஈசன் மற்றும் அம்பாள் பரிவார தெய்வங்களை ஆவாகனம் செய்து மங்கள வாத்தியம் முழங்க சிறப்பு பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க பூர்னாஹீதி முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பணி ஒருங்கிணைப்பாளர் தி.ரமேஷ், காரியக்காரர் பழனியப்பன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், சண்முகம், மற்றும் திரளான சிவனடியார்கள், எடத்தெரு மற்றும் பெரிய தெற்கு தெரு பெரம்பலூர் நகர பொதுமக்கள், பெண்கள், திரளாக கலந்து கொண்டனர். பூஜைகளை செல்லப்பா சிவாச்சாரியார் இளையராஜா, சிவாச்சாரியார் மற்றும் சிவக்குமார் குழுவினர் செய்திருந்தனர்.