Perambalur: “Stalin for Health” project medical camp in Athanur village!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் ந.மிருணாளினி பார்வையிட்டு, மருத்துவ முகாமிற்கு வந்திருந்த நபர்களின் குறைகளை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில் உடல் பரிசோதனை மற்றும் இரத்தப் பரிசோதனை செய்த நபர்களுக்கு உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், 14 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு புதிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளையும், 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டக்கங்களையும், 8 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார்.

இம்முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றது. மேலும் பொதுமக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!