பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டாபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி (64) ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் அதே ஊரில் வாலிகண்டபுரம் சாலையில் உள்ள நிலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை சின்னதம்பியின் கரும்பு தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கரும்பு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து தீ மே-லும் பரவாமல் தடுத்தனர்.
இந்த விபத்து குறித்து வருவாய்த்துறையினரும், மங்களமேடு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.