பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி கிராமத்திற்கும், ரெங்கநாதபுரம் கிராமத்திற்கும் இடையே உள்ள மயானத்தில் சடலம் ஒன்று பாறாங்கல்லால் புதைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் பாறாங்கல்லுக்கு அடியில் புதையுண்ட சடலத்தை கைப்பற்றி அது ஆண் சடலமா? பெண் சடலா? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக இப்பகுதியிக்கு வந்தார்.
திட்ட மிட்டே கொலை செய்யப்பட்டாரா? அல்லது எதிர்பாராத விபத்தா? என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பாறைக்கு அடியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதை தகவலறிந்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது