Perambalur: The Collector presented certificates and job orders to the differently-abled persons who received NSDC skill training!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் லெதர் செக்டார் ஸ்கில் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கான ஆணைகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ், கோத்தாரி பீனிக்ஸ் நிறுவன தலைவர் ரபீக் அஹமது மற்றும் லெதர் செக்டார் ஸ்கில் கவுன்சில் நிர்வாக இயக்குநர் சஞ்சய் குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்திடும் வகையில் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கி தருதல் ஆகிய நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. அதன் ஒரு பகுதியாக லெதர் செக்டார் ஸ்கில் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்திடும் நோக்கத்தில் அவர்களுக்கு 45 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி கீழப்புலியூரில் உள்ள டி.என்.ஜே அறக்கட்டளை திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டது.
வருவாய் மற்றும் பிற அரசு துறை அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.