Perambalur: The Collector presented fodder grass cutting machines to 40 people at a 50 percent subsidy in the presence of the MLA!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில், 40 பயனாளிகளுக்கு ரூ.11.60 லட்சம் மதிப்பிலான தீவன புல் நறுக்கும் கருவிகளை கலெக்டர் கிரேஸ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று வழங்கினார்.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புல் நறுக்கும் கருவிகள் விவசாயிகளுக்காக 50 % மானியத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தீவனப் பயிர் குறைந்தபட்சம் அரை ஏக்கரில் பயிரிடக்கூடிய, இரண்டு பசுமாடுகள் வளர்க்கின்ற தகுதியான ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு இக்கருவிகள் வழங்கப்படுகிறது. ஒரு புல் நறுக்கும் கருவியின் மதிப்பு ரூ 29,008/-ஆகும். இத்தொகையில் 50 சதவீதம் ரூ. 14,504/- மானியமாக அரசால் வழங்கப்படுகிறது. 40 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ரூ.11,60,320 மதிப்பில் புல் நறுக்கும் கருவிகள் ரூ 5,80,160 அரசு மானியத்தில் வழங்கினர். மின் விசையால் இயங்கக்கூடிய இக்கருவி மூலம் தீவனப்புல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு கால்நடைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். இதன் மூலம் தீவனம் விரயத்தை பெருமளவில் குறைக்கலாம்.

மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் ஆர்.எஸ்.டி.பாபு, உதவி இயக்குநர்கள் மூக்கன், குமார், பெரம்பலூர் நகராட்சித்த துணைத்தலைவர் ஆதவன், கால்நடை உதவி மருத்துவர்கள், பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!