Perambalur: The film ‘Parasakti’ commemorates the martyrs of the language movement! MP A. Raja praises it!!

திமுக மாநில துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா பெரம்பலூரில் எல்.ஏ. ராம் தியேட்டரில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த பராசக்தி சினிமா படத்தை பார்த்த அவர் தியேட்டர் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

இன்றைய தினம் பாராசக்தி படத்தை பார்த்தேன், 1965-களில் நடைபெற்ற அந்த உக்கிரமான மொழிப்போராட்டத்தை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். தமிழ் மொழியை காப்பதற்காக இன்னுயிர் நீத்த அந்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் விதமாக இந்த படம் அமைந்திருக்கிறது. ​இந்த காட்சியில் வெட்டப்பட்ட ஒரு வரிகளை, வெட்டப்பட்டிருந்தாலும் அந்த வரிகள் அண்ணா குரலில் இன்றைக்கும் எதிரொலிக்கிறது. ​தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம்! ​சுயமரியாதைச் சட்டம்! ​இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும், அந்தந்த மாநிலத்தினுடைய தாய்மொழியும் தான் இருமொழிக் கொள்கையாக இருக்கும். ​இந்த மூன்று கொள்கையும் இருக்கிற வரை, நான் மறைந்தாலும் இந்த தமிழ்நாட்டை அண்ணாதுரை தான் ஆளுகிறார் என்று சட்டமன்றத்திலே கூறப்பட்டது இன்று உண்மை என்பதை உணர்ச்சிப்பூர்வமாக உணர்த்துகிற படமாக இந்த படம் அமைந்திருக்கிறது. ​அதில் நடித்த, இயக்கிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! என தெரிவித்தார். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ம.ராஜ்குமார், பா.துரைசாமி, தியேட்டர் ஓனரும், திமுக பொதுக்குழு உறுப்பபினருமான மு. அட்சயகோபால், வக்கீல் என்.ராஜேந்திரன், 007 முகுந்தன், திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, பெரம்பலூர் மாவட்ட திமுக இணைஞரணி அமைப்பாளரும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர், மாவட்ட துணைத் தலைவரும் பெரும் ஒப்பந்ததாருமான தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் அழகு.நீலமேகம், மதியழகன், ராஜேந்திரன், நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், எசனை செ.குணசேகரன், மாநில மாவட்ட, ஒன்றிய பேரூர் கிளைக் கழகத்தை முக்கிய கட்சி பொறுப்பாளர்கள், முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் மற்றும் தி.க. லட்சுமணன் உள்ளிட்ட பலர் புடைசூழ சென்றிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!