பெரம்பலூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றப் பொதுத்தேர;தலுக்கு பயன்படுத்தும் வகையில் தலைமைத் தேர;தல் ஆணையரின் உத்தரவின்படி பீஹார் மாநிலத்திலிருந்து கடந்த ஜன.31 அன்று கொண்டுவரப்பட்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.
இன்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டள்ள அறை திறக்கப்பட்டு, எந்திரங்களை சரிபார்க்கும் பணி துவங்கியது.
பீஹார் மாநிலத்திலிருந்து 500 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 114 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பெரம்பலூரில் இருந்த 48 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 162 வாக்குப்பதிவு எந்திரங்களும், 500 கட்டுப்பாட்டு கருவிகளும் பெல் நிறுவன பொறியாளர் சந்திரசேகர் என்பவரால் முதல்நிலைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சரிபார்க்ப்படும் பணிகள் துவங்கியது.