Perambalur: Titanic ship exhibition; Crowds of people clashing with the waves!
பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் ஆபீஸ் சாலையில் டிஜே அம்யூஸ்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டைட்டானிக் கப்பல் கண்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கண்காட்சியை ஏராமாளன பொதுமக்கள் குடும்பத்துடன் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
கடலில் செல்லும் டைட்டானிக் கப்பலை தத்துரூபமாக தரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கப்பல் உட்பகுதியில் எவ்வாறு அமைந்து இருக்கும் என்பதையும், டைட்டானிக் கப்பலை அச்சு அசல் தோற்றத்துடன் தர்பார் மண்டபம், கேப்டன் கேபின், என பல விசயங்களை கண்முன் கொண்டு வந்து காட்சிப்படுத்தி உள்ளனர். டைட்டானிக் கப்பலில் உள்ளது போலவே வரவேற்பு அறை, கதாநாயகன், கதாநாயகி போட்டோ மற்றும் கப்பலில் பணியாற்றவர்கள் போட்டோக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் கப்பலை காண பொதுமக்கள், குழந்தைகள் திரண்டு வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர். மேலும், டைட்டானிக் கப்பல் செட்டுக்குள் இசையுடன் காண்பதால் மேலும் ரசனையை அதிகரிக்கிறது.
பொருட்காட்சியில் பொழுதுபோக்கும் விதாமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் மகிழும் விதமாகவும், ராட்டினம், பேய் வீடு, மோட்டார் சைக்கிள் சாகசம் மற்றும் விட்டு உபயோக பொருட்கள், பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பள்ளி – கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை நாட்களாக உள்ளதால் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை டிஜே அம்யூஸ்மெண்ட்ஸ் மேலாண் இயக்குனர் தினேஷ், மேலாளர்கள் உதயகுமார், காதர், ரவி ஆகியோர் செய்து உள்ளனர்.