பெரம்பலூர் அருகே முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற டூவீலர் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக
உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் கண்ணையன்(42), கூலித்தொழிலாளியான இவர் இன்று காலை 9.30 மணியளவில் அருகே உள்ள குரும்பலூருக்கு இறைச்சி எடுத்து வருவதற்காக அவருடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பெரம்பலூர் – துறையூர் சாலையில் செட்டிகுளம் பிரிவு சாலை அருகே முன்னே சென்று கோண்டிருந்த வாகனத்தை கண்ணையன் முந்தி செல்ல முயன்ற போது கரூரிலிருந்து டீசல் லோடு ஏற்றி கொண்டு பாண்டிச்சேரி நோக்கி வந்த டேங்கர் லாரியும் கண்ணையன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனமும் மீதுமோதிக் கொண்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி கண்ணையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணையனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓட்டி வந்த டிரைவர் சுப்பரமணியன் (36) கைது செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் கண்ணையனின் உறவினர்கள், பொதுமக்கள் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.